2,776 Views
பொலிஸ் தடுப்புகளை உடைத்து விட்டு மக்கள் குவிந்து வருவதால் பொலிஸாரும் மக்களின் உணர்வுகளை புரிந்து அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்துல் கலாமின் உடல் இன்று 21 குண்டுகள் முழங்க முழு அரசு, இராணுவ மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நல்லடக்க இறுதிச் சடங்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கும், அங்கிருந்து அடக்க ஸ்தலத்துக்கும் உடல் கொண்டு செல்லப்பட்ட போது லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மறைந்த தலைவருக்கு மலர் தூவியும் கண்ணீர் மல்கவும் அஞ்சலி செலுத்தினர்.



