நாட்டின் 72 பிரதான பாதைகளில் வேக கட்டுப்பாட்டு அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அந்த வேக கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மீறுகின்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவொன்றுக்கமைய பாதைகளில் உரிய வேக கட்டுப்பாட்டு அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டிருக்காவி
டின் அதிவேக வழக்குகளை தொடர வேண்டாம் என காவற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், வேக அளவு அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாதைகளில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை தலைமையம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மைய காலங்களில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.