9,012 Views
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதுக்கும் சிறைத்தண்டனைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் திரையுலகத்தினர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்த் திரையுலகினர் - திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் சகல தொழிற்துறையினரும் இன்று சென்னை சேப்பாக்க அரச விருந்தினர் மாளிகையின் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் தமிழ்த் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளின் காட்சிகளும் மாலை 6 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளன.
எனினும் படங்களை அவதானிக்கும்போது முக்கிய, முன்னணி நட்சத்திரங்கள் காணப்படவில்லை.
விக்ரம், கார்த்தி, விமல், பிரபு, விக்ரம் பிரபு போன்ற சிலரே தெரிகிறார்கள்.
இனித் தான் போய்க்கொஞ்ச நேரம் தலை காட்டுவார்களோ தெரியாது.