இணையம் ஊடான தொலைத்தொடர்புகளுக்கு பயன்படுத்தப்படும் வட்ஸப் (WhatsApp) செயலியில் (அப்ளிகேசனில்) முக்கிய வழு (Bug) ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த வழுவினால் பல மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இணையத்தள பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதன் மூலம் பல்வேறு மெல்வெயார்கள் எனப்படும் தீம்பொருள்களும், றென்சம்வெயார் போன்ற கப்பம் பெறும் அப்ளிகேசன்களும் வட்ஸப் வழியாக கணினி மற்றும் திறன்பேசிகளுக்குள் (Smartphone) ஊடுறுவ வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த எச்சரிக்கையின் அடிப்படையில் வட்ஸப் நிறுவனத்தினால் தமது செயலிக்கான (App) இற்றைப்படுத்தப்பட்ட மேம்படுத்தல்கள் (Updated) உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றை உடனடியாக வட்ஸப் வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்து, தமது வட்ஸப் செயலியை இற்றைப்படுத்திக் (Update) கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.