Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
பஸ்ஸிலிருந்து வெளியே விழுந்த பெண் 7 மாதங்களின் பின் மரணம்

Woman dies after falls out from bus - பஸ்ஸிலிருந்து வெளியே விழுந்த பெண் 7 மாதங்களின் பின் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,683 Views
சுமார் 7 மாதங்களுக்கு முன் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் வெளியே விழுந்து காயங்களுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஏழு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அப் பெண் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குழந்தை பிரசவிப்பதற்கு சில தினங்கள் இருந்த நிலையிலேயே கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். எனினும் குழந்தை சத்திரசிகிச்சையின் மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கம்பளை உலப்பனை மாவிலை தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி அப் பெண் சிகிச்சைகளுக்காக தனது தாயாருடன் பஸ்ஸில் சென்றுள்ளார். கர்ப்பிணியான அவருக்கு குறித்த பஸ்ஸில் ஆசனம் வழங்க யாரும் முன்வராத காரணத்தினால் நின்றவாறே பயணித்துள்ளார். இதன் போது வளைவொன்றில் பஸ் பயணித்துக் கொண்டிருக்கையில் நிலை தடுமாறிய அவர் பஸ்ஸிலிருந்து வீசியெறியப்பட்டு வெளியில் வீழ்ந்துள்ளார். இந்நிலையில் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மீண்டும் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பில் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top