3,177 Views
அரசியல் வாதி, நடிகை, நடன கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்ட இவர், 2009 இல் ஒளிபரப்பான "ராக்கி கா சுயம்வர்" என்ற ரியாலிட்டி ஷோ மூலம் இந்திய முழுவதும் பிரபலம் அடைந்தார்.
அண்மையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சியின் போது பேசிய அவர் சன்னி லியோனையும், அவர் சார்ந்த படங்கள் ,விளம்பரங்களையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் ஏனெனில் அவைகள் மக்களை பலாத்காரம் போன்ற தவறுகள் செய்ய தூண்டுபவைகளாக உள்ளன என்று கூறியுள்ளார்.
இது பற்றி கூறுகையில் " ஒரு பக்கம் பொதுமக்களுக்கு மத்தியில் ஒளிபரப்பாகும் கவர்ச்சி விளம்பரங்கள், மற்றொரு பக்கம் திரை படங்களில் அதீத கவர்ச்சியாக நடிப்பது என மக்களை திசை திருப்பும்படி சன்னி லியோனின் செயற்பாடுகள் உள்ளன. இதுவே சிலர் பெண்களிடம் தவறாக நடப்பதற்கு காரணமாக அமைகிறது",
மேலும் சன்னி லியோன் கவர்ச்சியாக இல்லாமல் முழுவதும் போர்த்திக்கொண்டு நடித்தால் மட்டுமே அவரை இந்தியாவில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அரசியல் பிரமுகர், தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அதுல் அன்ஜான், சன்னி லியோனின் விளம்பரத்தை விமர்சித்து அது சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடதக்கது.இப்போது ஒரு நடிகைக்கு எதிராக மற்றொரு நடிகையே குரல் கொடுத்திருப்பது பொலிவுட் தரப்பை பரபரப்பாக்கியுள்ளது.
மேலும் ராக்கி சாவந்தே கவர்ச்சி நடிகை என்பதால் இன்னும் சலசலப்புகள் அதிகரித்துள்ளன.இவங்களே கிளாமர் நடிகை, கூகுள் தேடலில் கூட இவரது புகைப்படம் தேடினால் கொஞ்சம் நாகரிகமான உடைகளுடன் படங்கள் கிடைப்பதில்லை , இவர் அவரை தடை செய்யச் சொல்லுவதா எனக் கிண்டல்களும் உருவாகியுள்ளன.