அஜித் , கமல் மோதல்!: பரபரப்பில் திரையுலகம்
Ajith and Kamal to fight - அஜித் , கமல் மோதல்!: பரபரப்பில் திரையுலகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
அஜித் , கமல் மோதல் தொடர்பில் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.
வரும் தீபாவளி தினத்தில் அஜீத்தின் 'தல 56' மற்றும் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' ஆகிய இரு படங்களும் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும் இரு படங்களும் வெளியாகும் சரியான திகதிகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த இரு படங்களில் வெளியாகும் திகதிகள் குறித்து ஒருசில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது
தீபாவளி நவம்பர் 10ஆம் திகதி வருவதாக இருந்தாலும் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' திரைப்படம் அவருடைய பிறந்த நாளான நவம்பர் 7ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமையாக இருப்பதால் தற்போது வெளிவந்த புதிய தகவலின்படி இந்த படம் நவம்பர் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது.
இதேபோல் தல 56' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் சாய்பாபா பக்தர் என்பதால் அவருடைய வியாழக்கிழமை செண்டிமெண்ட் பட ரிலீஸிலும் தொடர்கிறது. தீபாவளிக்கு முந்தைய வியாழக்கிழமையான நவம்பர் 5ஆம் தேதி 'தல 56' வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே உலகநாயகனின் படத்தை விட ஒரே ஒருநாள் 'தல 56' முந்தி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.