தொடங்கியது "சிங்கம் -3"....??? - மீண்டும் ஹரி - சூர்யா கூட்டணி.
வர்த்தக ரீதியிலான மசாலா ஹிட் படங்களை எடுக்கும் இயக்குனர் ஹரி இயக்கி, சூர்யா நடித்து வெளிவந்து சூப்பர்ஹிட் அடித்தன "சிங்கம்", "சிங்கம் -2" ஆகிய படங்கள். இந்த இரண்டு படங்களின் தொடர் வெற்றியால் "சிங்கம் -3" படத்தை எடுத்து அதையும் வெற்றிப்படமாக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஹரி.
"சிங்கம் -3" படத்திற்கான கதையை தயார் செய்துள்ள இயக்குனர் ஹரி, அதை மேலும் மெருகேற்றும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். அத்துடன், இந்தப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகையர்களையும், தொழில்நுட்பக்கலைஞர்களையும் தேர்வு செய்யும் வேலையையும் கவனிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்தநிலையில், முன்னைய இரு படங்களிலும் நடித்த சூர்யாவே "சிங்கம் -3" என்ற இந்தப்படத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவரோடு மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்காவுடன், ஷ்ருதிஹாசனும் இன்னொரு நாயகியாக டூயட் பாடவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
நவம்பர் மாதமளவில் ஆரம்பிக்கவிருக்கும் இந்த "சிங்கம் -3" என்ற படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற பல வெளிநாடுகளில் படமாக்க இயக்குனர் ஹரி முடிவு செய்துள்ளாராம். ஒரு சில காட்சிகளை மட்டுமே இந்தியாவில் படமாக்கவிருக்கும் ஹரி, முக்கியமான காட்சிகளை அவுஸ்திரேலியாவிலும், படத்தின் முக்கியமான இறுதிக்கட்டக் காட்சியை பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் இல் படமாக்கப்போவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
*S. G. R