கொலை செய்யப்பட்ட திவுலபிட்டிய - கொடதெனியாவ சிறுமியின் இறுதி சடங்குகள் நேற்றைய தினம் இடம்பெற்ற பின்னர், சிறுமியின் குடியிருப்பு பகுதியில் கூடிய பெரும்திரளான மக்கள் கொலை குற்றவாளியை கைது செய்யுமாறு வலியுறுத்தி நீண்டநேரம் அங்கு தரித்துநின்றனர்.
இதன்போது குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டார்கள் என்ற வகையில் இருவருக்கு இதன்போது காவல்துறையினர் கடுமையாக எச்சரித்தனர்.
சிறுமியின் இறுதி சடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்குகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த தினத்தில் காணாமல் போன 5 வயதான சிறுமி, பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பின்னர் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கைது செய்ய விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சிறுமியை கொலை செய்தது அவருக்கு நன்கு அறிந்த, பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராக இருக்கக் கூடுமெனவும் இதன்காரணமாகவே அவரைக் கொண்டு செல்லும் வேளையிலும் அவர் கூச்சலிட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.