21,107 Views
சிறுமியின் கொலை தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் 30 இற்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதில் சிறுமியின் தாய் , தந்தை , பாட்டனார், பாட்டி ஆகியோரும் அடங்குகின்றனர்.
இதேவேளை சிறுமி தொடர்பில் மேலும் அவதானமாக இருந்திருந்தால் இக்கொலையை தவிர்த்திருக்க முடியுமென அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும் மகளின் மரணத்தினால் மனமுடைந்து போனதாகவும் , இதனால் அவரது பூதவுடலின் அருகில் கூட நிற்கமுடியாத அளவுக்கு துயரத்தில் இருந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தன்மேல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் அவரது தந்தை இதன்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிறுமியின் இறுதிக்கிரியைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.