'இளையதளபதி' விஜய் மறந்த லொஜிக்......??? - புலி
இந்திய சினிமா வரலாற்றில் YOU TUBE இல் ரசிகர்களின் அதிக விருப்பை பெற்ற முதல் திரைப்பட விளம்பர முன்னோட்டக்கட்சி என்றால் அது நம்ம 'இளையதளபதி' விஜய்யின் "புலி" படத்தையே சேரும்.
இந்த நிலையில், “புலி" திரைப்படத்தை மேலும் விளம்பரப்படுத்த, இந்தப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் ப்ரமோஷன் பாடல் ஒன்றை கடந்த திங்கட்கிழமை YOU TUBE இல் வெளியிட்டார்கள் படக்குழுவினர். அதே வரவேற்பை பெறும் என்ற அதீத எதிர்பார்ப்போடு, மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்ட அந்தப்பாடல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களிடம் கோபக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதே உண்மை.
முன்னணி நடிகர் ஒருவரின் பட ப்ரமோஷன் பாடலில், அந்த நடிகரே தோன்றுவதையும், தாம் நேசிக்கும் அந்த நடிகரை ரசிக்கவுமே ரசிகர்கள் விரும்புவார்கள். இதை அந்தநாள் முன்னணி ஹீரோ MGR தொடக்கம் 'சூப்பர்ஸ்டார்' ரஜினி முதல் 'தல' அஜித் வரை மிக நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். நிலை இப்படியிருக்க, வெளியாகியிருக்கும் "புலி" படத்தின் ப்ரமோஷன் பாடலில் தேவி ஸ்ரீ பிரசாத்தை நடனமாட வைத்தது ஏன்..? 'தல' அஜித் புரிந்து வைத்திருக்கும் இந்த 'லொஜிக்'கை சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் இளையதளைபதி விஜய் இதுவரை அறியாமல் இருந்துள்ளாரா...? என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ரசிகர்களின் கோபத்திற்கு காரணம் இதுமட்டுமல்ல. "புலி" படத்தின் புதிய காட்சிகள், வெளியாகியிருக்கும் பாடலில் இணைக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் YOU TUBE ற்குள் நுழைந்த ரசிகர்களுக்கு அங்கேயும் ஏமாற்றமே எஞ்சியது. ஏனெனில், ஏற்கனவே வெளியான காட்சிகளே இதிலும் சேர்க்கப்பட்டதுடன் புதிய காட்சிகள் எவையும் வெளியிடப்படவில்லை என்பதும் கூட ரசிகர்களை மனம் குமுற வைத்துள்ளதாம்.
*S. G. R