Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
மனம் திறந்தார் பேர்குஷன் - என்ன ஒரு வில்லத்தனம் விளையாட்டில்......???

man united-ferguson - மனம் திறந்தார் பேர்குஷன் - என்ன ஒரு வில்லத்தனம் விளையாட்டில்......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,459 Views
மனம் திறந்தார் பேர்குஷன் - என்ன ஒரு வில்லத்தனம் விளையாட்டில்......??? 

எந்த விளையாட்டையும் விளையாட்டாய் எடுத்துக்கொள்பவர்கள் ரசிகர்கள். அதே விளையாட்டை வாழ்க்கையாகவே கொண்டவர்கள் வீரர்களும் பயிற்சியாளர்களும். இப்படிப்பட்ட வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஒழுக்கம், பொறுமை, தன்னடக்கம் என்பன இன்றியமையாதவை. நிலை இப்படியிருக்க, காற்பந்தாட்ட பயிற்சியாளர் ஒருவர் ரொம்பவே வில்லத்தனம் பண்ணியிருக்கிறார், அதை அவரே தான் சொல்லியுமிருக்கிறார்.
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான 'மன்செஸ்டர் யுனைட்டெட்'டின் 26 வருடகால பயிற்சியாளராக இருந்தவர் சேர் அலெக்ஸ் பேர்குஷன். 13 பிரிமியர் லீக் கிண்ணங்களை வெற்றிகொள்ள வைத்த இவர் பயிற்றுவிப்பாளராக இருந்த காலத்தில், தான் பணியாற்றிய கழகத்தில் விளையாடிய வீரர்களை விட தனக்கே அதிக தொகை சம்பளமாக கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார். அதை அவரே, தான் எழுதிய புத்தகம் ஒன்றிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது பயிற்றுவிப்பின் கீழ் விளையாடும் எந்தவொரு வீரரும் தன்னைவிட அதிகரித்த தொகையை சம்பளமாகப் பெற்றுவிடக்கூடாது என்று, 2010-ம் ஆண்டு மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே இந்த வில்லத்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார் ஸ்கொட்லாந்து நாட்டவரான காற்பந்தாட்ட பயிற்சியாளர் சேர் அலெக்ஸ் பேர்குஷன்.

இதன்படி, அந்தக்கழகத்தின் நட்சத்திர வீரரான வெய்ன் ரூனிக்கு, பயிற்சியாளரான இவருக்கு கிடைக்கும் சம்பளத்தொகையை போன்று இருமடங்காகக் கிடைக்கவிருந்த மிகப்பெரிய சம்பளத்தொகையை கிடைக்கவிடாமலும் செய்திருந்ததாக எந்தவித குற்றவுணர்வும், தயக்கமுமின்றி தனது நூலில் எழுதியிருக்கிறார் இந்த விளையாட்டு வில்லன்.

இதேவேளை, தான் 'மன்செஸ்டர் யுனைட்டெட்' டில் பணியாற்றிய காலத்தில் தனது பயிற்றுவிப்பில் உலகத்தரமான வீரர்கள் நான்கு பேர் மாத்திரமே இருந்ததாகவும் போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, "வேல்ஸ்"சின் ரயான் கிக்ஸ், இங்கிலாந்தின் மத்தியகள வீரர் போல் ஸ்கோல்ஷ்ஸ், முன்கள வீரர் எரிக் கன்டொனா ஆகியோரே அவர்கள் எனவும் சொல்லியிருக்கிறார் சேர் அலெக்ஸ் பேர்குஷன்.

அத்துடன், அந்தக்கழகத்தில் பிரபல நட்சத்திர வீரர்களான வெய்ன் ரூனி, டேவிட் பெக்காம், பீட்டர் சூமைக்கல், கார்லோஸ் டேவிஸ், றோய் கீன், ரியோ பெர்டினாட் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தும் அவர்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்ற தனது வரையறைக்குள் சேர் அலெக்ஸ் பேர்குஷன் உள்ளடக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்க விடயம்.
என்ன ஒரு வில்லத்தனம்...........?????

*S. G. R


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top