Boy killed in Athurugiriya - அத்துருகிரிய சிறுவன் கொலை: நபரொருவர் மீது பொலிஸாரின் பார்வை திரும்பியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,682 Views
அத்துருகிரிய - பனாகொட - கப்புருகெட பிரதேசத்தில் தாக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் பாழடைந்த வீடொன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.
கவிந்து தேவேந்திர கப்புருகே என்ற குறித்த சிறுவன், வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில் அவரது பெற்றோரும், அயலவர்களும் சிறுவனை தேடியுள்ளனர்.
இதனை அடுத்தே குறித்த சிறுவனின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் இருந்த மற்றுமொரு பாழடைந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனின் தந்தையின் சகோதரனின் கீழ் பணி புரிந்த நபரொவர் மீது சந்தேகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.