நடனத்தில் விஜய் ரொம்ப வேகம் -நடிகை ஹன்சிகா-
சின்னக் குஷ்பு என்று இப்போது பலராலும் அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா க்கு அப்படி தன்னை அழைப்பது ரொம்ப பிடிக்குமாம் என்று அவரே கூறியுள்ளார். புலி படப்பிடிப்பின் இடையே கொஞ்சம் மனம் விட்டும் பேசினாராம் சின்னக்குஷ்பு.
தன்னால் சில வேளைகளில் நடிகர் விஜய்யுடன் நடனம் ஆட முடியாமலும் போகும்,அப்படி சிறப்பாகவும் வேகமாகவும் நடனம் ஆடுவார் விஜய் என்று விஜய்யை வியந்து தள்ளியுள்ளார். புலி படத்தில் ஸ்ரீதேவி, சுருதிஹாசனுடன் நடித்தது புதிய அனுபவம். அவர்கள் என்னிடம் அன்பாக பழகினார்கள். விஜய் மற்றவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவர். அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொல்லியுள்ளார் ஹன்சிகா.
புலி படத்தில் பல்வேறு விதமான நகைகள் அணிந்து ராணி வேடத்தில் நடித்தேன், நிறைய நகைகள் அணிய வேண்டிய சூழலில் மிக கடினமான ஒப்பனையுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.இதில் சில வசனங்களை மனப் பாடம் செய்து பேசியுள்ளேன். தமிழ் பேசுவதற்கு எனக்கு ரொம்ப விருப்பம்,அதனால் நிறைய தமிழ் வார்த்தைகளை பேசி பழகி வருகின்றேன் என்றும் ஹன்சிகா கூறியிருக்கின்றார்.
வேகமாக முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் ஹன்சிகாக்கு எங்கள் சூப்பர் ஸ்டார் உடனும் நடிக்க ஆசையாம். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ரசிகர்கள் விரும்பும் எந்த வேடத்திலும் நடிக்க தயாராக உள்ளதாகவும் ஹன்சிகா சொல்லியுள்ளாராம்.
-ரிஷிவ் -