35,143 Views
யுவதியொருவரை இளைஞர்கள் இருவர் தாக்கும் காணொளியொன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த து.
இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை வெளியாகியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு இத்தகவலை எமக்கு வழங்கியது.
இதன்படி காணொளியில் தாக்குதலுக்குள்ளாகிய யுவதி மற்றும் தாக்கும் இளைஞன் மற்றும் சிலர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு நேற்று வந்துள்ளனர்.
அவர்களின் தகவலின்படி இச்சம்பவமானது 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி மாலை 1 மணியளவில் கட்டுநாயக்க , மாதுவ பிரதேசத்தில் , மாதுவ கங்கைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதி கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் அவர் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் அவ்விளைஞர் அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர்கள் இருவரும் காதலர்கள் எனவும் விரைவில் திருமணம் முடிக்கவுள்ளதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தை அவர்களின் நண்பர்களில் ஒருவரே படம்பிடித்துள்ளார். அண்மையில் அவர் அவரது கையடக்கத்தொலைபேசியை திருத்துவதற்காக கடையொன்றுக்கு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்த ஒருவராலேயே இக்காணொளி வெளியாகியிருக்கக்கூடுமெனவும் அவர்களில் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.