இந்தியாவுக்காக அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவுக்கு அடுத்து இரண்டாம் இடத்திலுள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் சாகிர் கான் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை இன்று அறிவிக்கவுள்ளார்.

92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுக்களையும், 200 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 282 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ள சாகிர் கான், இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக நீண்ட காலம் விளையாடியவர்.
37 வயதாகும் சாகிர், உபாதைகள் காரணமாகவும், வேகம் குறைவடைந்த காரணத்தாலும், ஒரு வருட காலமாக டெஸ்ட் போட்டிகளிலும், 3 வருட காலமாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை.
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்னொரு பருவகாலம் IPL போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.