9,598 Views
தனது சிறிய தந்தை மற்றும் சிறிய தாயாரிடமிருந்து பணத்தை கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நுவரெலியா- ஹெட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் அவர்கள் இருவரும் வங்கியிலிருந்து எடுத்து வந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை அவர்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளார்.
முகத்தை மறைத்தவாறு வந்துள்ள அவர் சிறிய தந்தையின் கழுத்தை கத்தியால் வெட்டியுமுள்ளார்.
அப்பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அப் பணம் அவர்களால் அனுப்ப ப்பட்ட தெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பெண் அவரது சிறிய தந்தை மற்றும் சிறிய தாயின் பராமரிப்பில் இருந்து வந்தவரெனவும் , அவர் பணத்தை வீண் விரயம் செய்வதால் பணத்தை அவருக்கு அனுப்பாமல் சிறிய தந்தைக்கு அனுப்பிவரும் விடயமும் தெரியவந்துள்ளது.
தற்போது கைதாகியுள்ள அப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.