இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், விஜய் 60' படத்தை இயக்குவது யார்? என்ற மர்மம் நீடித்து கொண்டே இருக்கின்றது.
விஜய் 60' படத்தை இயக்க கிட்டத்தட்ட பத்து இயக்குனர்கள் வரிசையில் நிற்பதாக கூறப்படும் நிலையில் எஸ்.ஜே.சூர்யா இவர்களில் முதலாவதாக இருப்பதாக தெரிகிறது.
எஸ்.ஜே.சூர்யா, விஜய்யிடம் இருமுறை அடுத்த படம் குறித்து கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் 'விஜய் 60' படத்தை இயக்குவது யார்? என்பது இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.