நகுலுக்கு திருமணம்
Nagul's engagement - நகுலுக்கு திருமணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘போய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் நகுல்.
நடிகை தேவயானியின் தம்பியான இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘போய்ஸ்’ படம் மூலம் எல்லோருடைய கவனத்தைப் பெற்றபோதிலும் படம் ஓடாததால் நகுலுக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ 2008 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் , ‘மாசிலாமணி’, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இப்போது, அமளிதுமளி உட்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நகுலுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
அவருக்கும் ஸ்ருதி பாஸ்கர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை நிச்சயித்துள்ளனர்.