இந்த மீனின் முட்களிலிருந்து பல மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக இரத்தம் உறைதலைத் தடுக்கவும், புற்றுநோய் செல்களை அழிக்கவும் இந்த மீன் உதவுகின்றது.
திருக்கை மீனில் ஒமேகா-3 சத்து அதிக அளவில் உள்ளது. எனவே, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி இந்த மீனுக்கு உள்ளது.
இந்த திருக்கை மீனின் கொழுப்பு, நீரிழிவு நோயின் ஆபத்தைக் குறைக்கின்றது. இந்த மீனை வாரம் ஒருமுறையாவது நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது சிறந்தது.
இந்த மீனில் விட்டமின் D,E,B1,B2,B6,B12,C போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
எனவே இயற்கையான முறையில் ஆரோக்கியம் தரும் திருக்கை மீனை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தினை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.