கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியான 'Mufasa The Lion King' திரைப்படம் உலகம் முழுவதும் Box Office இல் வசூல் வேட்டை நடத்தியது.
இந்தத் திரைப்படத்திற்காக தமிழில் அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்தார். ஹிந்தியில் Mufasa வுக்காக ஷாருக்கான், தெலுங்கில் மகேஷ் பாபு குரல் கொடுத்தனர்.தமிழ்நாட்டில் மட்டும் இத்திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. உலகளவில் இத்திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.5,888 கோடி வரை வசூல் செய்து கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றித்திரைப்படங்களில் ஒன்றாக சாதனை படைத்தது.
இந்தநிலையில் 'Mufasa The Lion King' திரைப்படம் இம்மாதம் 26 ஆம் திகதி
OTT தளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் வெளியாக உள்ளது.