5,867 Views
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடர்வதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும் பலர் திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்காமல் வீடுகளை விட்டு வெளியேறி தவிக்கும் மக்கள் தங்குவதற்காக ஆங்காங்கே உள்ள பிரபல திரையரங்கங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாறு காணாத வெள்ளத்தால் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெள்ள நீர் பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏராளமான மக்கள் படகுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.