"கத்தி" வசூல் மழை- twitter ல் முருகாதாஸ் தெரிவிப்பு.A.R முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான
"கத்தி" திரைப்படம் வசூல் மழை பொழிகின்றது.
நேற்றைய நாளில் தமிழகத்தில் மட்டும் 12.5 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.ஆனாலும் அதைவிடவும் இருமடங்கு வசூலானதாக ARமுருகதாஸ் கூறியுள்ளார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலுள்ள திரையரங்குகளில் வசூல் 16 கோடியே 45 லட்சமாகும். வெளிநாடுகளில் வசூலான தொகை 7.35 கோடி என்று A .R முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை கத்தி முறியடித்துள்ளதாகவும் 23.80 கோடியை முதல் நாளில் கத்தி வசூலித்துள்ளதாகவும் அவர் தன் twitter இல் தெரிவித்துள்ளார்.

*தில்லையம்பலம் தரணீதரன்