10,083 Views
காவத்தை, கொட்டகெத்தன பெண்கள் படுகொலைகள் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு இறுதியாககொலை செய்யப்பட்ட 48 வயதான பெண்ணின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரிகளே இந்ததகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே அங்கு இடம்பெற்ற இரு இரட்டைப் படு கொலைகள் உள்ளடங்கலாக 6 கொலைகள் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மரபணு பொருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை பெல்மதுளை நீதிவான் நீதிமன்றில் இரகசிய பொலிஸார் முன் வைத்தனர்.
இறுதியாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் கொலை தொடர்பிலான மரபணு . அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர், சேதுங்க ஆரச்சிகே தயாவதி, சேதுங்க ஆரச்சிகே திலகாவதி ஆகிய வயோதிப சகோதரிகள் இருவரின் இரட்டைக் கொலை மற்றும் லேகம்கே பிரேமாவதி மற்றும் ஜே.எல்.புஷ்பகுமாரி ஆகியோரின் கொலைகள் குறித்தும் மற்றொரு இரட்டைக் கொலை குறித்தும் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலைகள் அனைத்தும் பாலியல்துஷ்பிரயோகத்தின் பின்னர் இடம்பெற்றவை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் உள்ள சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போதே முன்னர் இடம்பெற்ற 6 படுகொலைகளுடன் சந்தேக நபருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.