பிச்சைக்காரன் ஆனார் விஜய்ஆண்டனி.இசையுலகில் இருந்து திரையில் நாயகனாக முகம்காட்ட வரிசைகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் பாடலாசிரியர்களும்,இசையமைப்பாளர்களும். இந்த வரிசையில் விஜய் ஆண்டனியை தொடர்ந்து தற்போது "பென்சில்" படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இணைந்திருக்கிறார்.ஆனால்,அதுவல்ல இப்போது விஷயம்.
"நான்", "சலீம்" ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியதோடு கதாநாயகனாகவும் நடித்து பெயர் வாங்கியிருக்கிறார் விஜய்ஆண்டனி. இவர் நடிப்பில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தோடு வெளியாகவிருக்கும் 3வது படம் தான் "இந்தியா பாகிஸ்தான்'. இந்தப் படத்தை தொடர்ந்து இன்னுமொரு படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
ரோஜாக்கூட்டம், டிஸ்யூம், பூ ஆகிய வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சசி இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம். இயக்குனர் சசியோடு டிஸ்யூம் படத்திற்காக 2006-ம் ஆண்டில் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார் விஜய்ஆண்டனி.
தற்போது இந்தப் புதியபடத்திலும் இருவரும் சேர்ந்து பணியாற்றப்போகிறார்களாம். நடிப்பு மட்டுமல்லாமல் இந்தப்படத்திற்கான இசையையும் விஜய் ஆண்டனியே பொறுப்பேற்றிருக்கிறாராம்.
இந்தப்படத்திற்கான பெயர்கூட முடிவு செய்யப்பட்டு பதிவும் செய்யப்பட்டு விட்டதாம். கதைக்கு பொருத்தமாக இருக்க "பிச்சைக்காரன்" என பெயரிடப்பட்டுள்ள விஷயம் வெளியே கசிந்துள்ளது. இருந்தாலும்,இந்தப் "பிச்சைக்காரன்" பற்றிய அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
போகிறபோக்கை பார்த்தால் தமிழ் சினிமாவை தானும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் எண்ணத்தில்தான் விஜய் ஆண்டனி திரையில் தலை காட்ட முடிவு பண்ணியுள்ளதாக தெரிகிறது.
பெயரை மட்டும் பிச்சைக்காரன் எண்டு வையுங்க.....
தயாரிப்பாளர் அப்படி ஆகிடாமல் பார்த்துக்கோங்க.........
*கணேஷமூர்த்தி ராகவன்