இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக கேன் வில்லியம்ஸன் 59 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திலகரட்ன தில்ஷான் 91
ஓட்டங்களையும், லஹிரு திரிமன்னே ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவு செய்யப்பட்டார்.
