இப்போதைக்கு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கூட்டணி அட்லியும் விஜயும்தான்.
.அக்சன் கலந்த போலீஸ் கதையாக உருவாகும் தெறி படம் விஜய் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று தெறி படத்தின் தரப்பில் இருந்து பெரும் நம்பிக்கைகள் கொடுக்கப்படுகின்றது .
படம் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதால் மேலும் அந்த எதிர்பார்ப்பை அதிகரித்து வியாபாரம் ஆக்கிவிடும் நோக்கில் அவ்வப்போது சில படத்தில் வரும் புகைப்படங்கள் சில கதை பற்றிய சுவாரசியங்கள் என இன்னும் பரபரப்பு ஏற்றப்படுகின்றது . இதன் உச்சகட்டமாக இப்போதைக்கு 50 வினாடிகள் வரக்கூடிய தெறி படத்தின் விறுவிறுப்பான டீசர் ஒன்று உருவாக்கப்படுகின்றதாம் அதில் விஜயின் அத்தனை ஹெட்டப்புக்களும் காடப்படுகின்றதாம் .
இது நிச்சயம் விஜய் ரசிகர்களை தெறிக்கவைக்கும் என்று அடித்து சொல்கிறதாம் படக்குழு . சித்திரைப் புத்தாண்டுக்கு வெளிவர இருக்கின்ற நிலையில், தெறிபடத்தின் டீசர் இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட இருப்பதாக சில செய்திகள் கசிந்திருக்கிறது .