532 Views
திரைப்பட இயக்குனர் ருத்ரைய்யா நேற்று சென்னையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67.
தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்த இவர்,1978ம் ஆண்டு வெளிவந்து எல்லோராலும் பேசப்பட்ட படமான
'அவள் அப்படித்தான்' என்றபடத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இந்த படம் கமல்ஹாசன்,
ரஜனிகாந்த, ஸ்ரீ பிரியா ஆகியோரின் நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளிவந்தது. தமிழில் வெளியான கடைசிக் கறுப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடைந்தாலும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
1980ம் ஆண்டு அவரின் இயக்கத்தில் புது முகங்களின் நடிப்பில் வெளிவந்த 'கிராமத்து அத்தியாயம்' எனும் படமும் தோல்வியடைந்தது .
அதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்தது.