விலைமாதுவாக ஸ்ரேயா ...?
"பூம்பாவாய் ஆம்பல்..ஆம்பல்... புன்னகையோ மௌவல்... மௌவல்.." என கவிப்பேரரசு வைரமுத்து பாட்டெழுத, சூப்பர் ஸ்டார் ரஜினியே இவர் தான் என் படத்தின் நாயகி என விரும்பி அழைத்து "சிவாஜி" படத்தில் தனக்கு ஜோடியாக்கிக் கொண்ட அழகி தான்
நடிகை ஸ்ரேயா.
கோடம்பாக்கத்தின் முன்னணிக் கதாநாயகர்களுடன் ஜோடியாகி, பிரபல முன்னணிக் கதாநாயகிகளின் பெயர்ப்பட்டியலில் தன் பெயரையும் இணைத்துக் கொண்ட ஸ்ரேயா, தமிழ்த் திரையுலகம் கடந்து இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பேஜ்பூரி, ஆங்கிலம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளாராம்.
கோலிவூட்டில் புகழின் உச்சியிலிருந்த இந்த ஸ்ரேயாவுக்கு திடீரென என்ன ஆனதோ...? யார் கண் பட்டதோ..? என கேட்கும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டதாம். பிஸி யான நடிகையாக இருந்த அவர் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடிப்பதோடு, அவருடைய மார்கெட்டிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
நிலைமை இவ்வாறிருக்க, தான் இனி விருதுக்கான படங்களில் நடிக்கப் போவதாக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறாராம் ஸ்ரேயா. இந்திய மத்திய அரசினால் வழங்கப்படும் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெரும் ஆசையில் இருப்பதாகவும், அதனால் கதைக்குத் தேவைப்படுமிடத்து விலைமாது பாத்திரத்திலும் நடிப்பதற்குத் தயார் எனவும் சொல்லியுள்ளாராம்.
இந்தித் திரையுலகில் விலைமாது பாத்திரத்தில் நடித்த நடிகைகளுக்கே பெருமளவில் இவ்வாறான விருதுகள் கிடைத்துள்ளன. இதனாலேயே ஸ்ரேயாவும் அந்த மாதிரியான வேடங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் கதைகள் வெளியாகின்றன.
இதேவேளை கன்னடத்தில் விலைமாது பாத்திரத்தில்
ஸ்ரேயா நடித்து வெளியான படமொன்று தமிழிலும் வெளியாகவுள்ளதாம். வாய்ப்புக்கள் இல்லாத நிலையிலுள்ள ஸ்ரேயா, வெளியாகவுள்ள அந்தப் படத்தைத் தொடர்ந்து அரைகுறை ஆடையில் விலைமாது பாத்திரத்தில் நடிக்கவேண்டிய நிலை இருப்பதாகவும், அதனாலேயே விருதுகளை காரணம் காட்டி இப்படியான பொய்யான காரணங்களைக் கூறி வாய்ப்புக்களைத் தேடிக்கொள்வதாக திரையுலகம் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்வதாகவும் தகவல்.
"பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்...." பழமொழி.
ஸ்ரேயா ஆடை தானே குறைக்கிறார். இதிலென்ன ஆச்சரியம்....?
கவர்ச்சியில் கலக்கும் ஸ்ரேயாவின் புகைப்படத் தொகுப்பு *கணேசமூர்த்தி ராகவன்.