440 Views
மனைவி மேக்னாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை சோஹா அலிகான், பின்னர் சுருதி ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்டவர் நடிகர் சித்தார்த்.
சுருதி ஹாசனுடனான உறவு முறிவடைந்த பின்னர் அவர் நடிகை சமந்தாவோடு காதலில் விழுந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.
இதனை நிரூபிக்கும் முகமாக இருவரும் பொது விழாக்கள் , சினிமா நிகழ்ச்சிகள் ஏன் கோயிலில் கூட ஒன்றாக அமர்ந்து பூஜையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், சில ஊடகங்களில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
எனினும் இருவரும் வழக்கமான திரையுலக ஜோடிகள் போல இதனை மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் தான் இருவரும் காதலை திடீரென முறித்து கொண்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல் முறிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இருவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமந்தா புத்தாண்டை தோழியுடன் கோவாவில் கொண்டாடியதாக படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இதுமட்டுமன்றி தெலுங்கு பட விழாக்களிலும் தனியாகவே கலந்து கொள்கிறார்.
சித்தார்த்தும் தனியாகவே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இவை அனைத்தும் இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரிவை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.