கடந்துபோன சில வருடங்களாக 1980களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த பிரபலங்கள் , சந்தித்து நட்புப் பாராட்டி அன்போடு விருந்துண்டு மகிழும் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே!
ஒவ்வொரு முறையும் நடிகை லிஷிதான் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைப்பார். கடந்த முறைகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட கலந்து மகிழ்ந்திருந்த செய்திகள் உங்கள் நினைவுகளில் தேங்கிக் கிடக்கும்.
வருடாவருடம் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்ட '' 80களின் நாயக நாயகியர்களின் சந்திப்பு'' நிகழ்ச்சியானது இந்தமுறையும் ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
இந்தமுறை ரஜினிகாந்த், கமல் ஆகியோரும் கலந்து கொள்வது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதிலும், கமல் வழமையாக இந்த நிகழ்வில் இதுவரை கலந்து கொள்ளவில்லை. இந்தமுறைதான் முதன் முதலாக கலந்து சிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
அத்தோடு, குழுவால் அறிவிக்கப்படும் திகதியில் குறிப்பிடப்படும் ஆடையில்தான் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பது விழாவின் விதி.
இந்தமுறை இன்னொரு வாய்ப்பும் இளையவர்களுக்கு வாய்த்திருக்கிறது. மூத்த நடிக நடிகையர்களோடு இளையவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மோகன், சுதாகர், மம்முட்டி, கார்த்திக், சுரேஷ், விஜய்பாபு, விஜயகுமார், அம்பரீஷ், கன்னட ரவிச்சந்திரன், கதாநாயகிகள் பூர்ணிமா, அம்பிகா, ஸ்ரீப்ரியா, ரேவதி, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், ராதிகா, லிசி, சசிகலா, நதியா, மாதவி, ஊர்வசி, சுமலதா, சுவப்னா, சரிதா, மதுபாலா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் கலந்து இந்த விருந்து விழாவை சிறப்பிக்கவுள்ளதாக அறியமுடிகிறது.
கொசுறுச் செய்தி :- இந்த சந்திப்பு நிகழ்வில் சிம்பு, நமீதா, பிந்து மாதவி, வேதிகா மற்றும் வைபவ் போன்ற இன்றைய நடிக நடிகைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளமை இன்னும் சிறப்பு
#சாப்பாட்டுகென்று ஒரு சந்திப்பா? ஹூஊஊஊஊஒ