சி.சி.எல் 5 நட்சத்திர கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் கடந்த தினம் நடைபெற்றது. போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்கள்.
வெற்றிக்கு பின்னர் நட்சத்திர விருந்தகத்தில், நடிகர் நடிகைகளுக்கு பெரிய விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படிருக்க, அனைத்து நடிக நடிகைகளும் கலந்துகொள்ள வந்திருந்தார்கள். இதற்காக நடிகை ஷார்மியும் வந்திருந்தார்.
வந்திருந்த ஷார்மியுடன், ஒரு புகைப்படம் எடுக்க வேண்டுமென இளைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஷார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்துள்ளார். சற்றும் அம்மணி எதிர்பார்க்காத நேரத்தில், அவரது இடுப்பை கிள்ளியுள்ளார் அந்த வாலிபர். ஷார்மி தடுமாறிப் போக, அங்கிருந்தவர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாலிபரை வாட்டி எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இறுதியில், ஷார்மி ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதாவது, இனி தனது பாதுகாப்புக்காக இரண்டு காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதே அந்த முடிவு.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-