ராசியில்லா நடிகையாக கேடி படத்தோடு ஓரங்கட்டப்பட்ட மாநிற அழகி தமன்னாவுக்கு, கல்லூரி எனும் படம் மறு வாழ்வைக் கொடுத்தது. அடுத்தடுத்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் வாய்ப்பையும் கொடுத்தது.
ஏகோபித்த ஆதரவோடு தமிழில் முன்னணி நடிகையாக சிலகாலங்கள் வரைக்கும் வளைய வளைய வந்தவருக்கு மேற்கொண்டு தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவரே அவரைக் கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட கண்டிஷன்கள், அதிகரித்த எக்குடோக்கு சம்பள விவகாரங்களால் தமிழ் சினிமா அவரை பின்தள்ளிவிட்டு, அவருக்கு பிறகு வந்த நாயகிகளை அரவணைத்துக் கொண்டது.
அம்மணி தன்தாய்மொழிப் பக்கம் போய் கல்லாவைக் கட்டத் தொடங்கினார்.
மீண்டும் வீரம் மூலமாக தமிழில் வந்தார். வீரம் ஏனையவர்களுக்கு புகழ் கொடுத்தது. தமன்னாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், திருமண வயதை அடைந்துள்ள அம்மணிக்கு, விரைவில் திருமணம் என்றும், இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும், பல செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், கோபமாக கொந்தளித்துள்ளார் தமன்னா.
''தவறான செய்திகளை தருகிறார்கள். நம்பாதீர்கள். எனக்கு இப்பொழுது திருமணம் செய்துகொள்ள ஒரு அவசரமும் இல்லை. இன்னும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களிலும் படங்களிலும் நடித்துதான் நான் விடைபெறுவேன். தேவையில்லா வதந்தியான செய்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள்'' என்றார் தமன்னா.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-