தமிழ் சினிமாவில் பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச சேட்டைக்கார ஹீரோன்னா, அது நம்ம பாஸ் என்கிற ஆர்யாதான். அந்தளவுக்கு அவரோடு நடிக்கும் நடிகைகளும் சரி, ஏனைய பெண் இரசிகைகளும் சரி, ஆர்யாவோடு கலந்து நட்பாகி விடுவார்கள். என்ன மந்திரமோ மாயமோ என்று ஏனையவர்கள் புலம்புவது மட்டும் மிச்சம்.
இந்த விஷயம் இவ்வாறு இருக்க, இப்பொழுது ஆர்யா சந்தானம் மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க''.
இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையில் ஆர்யா சந்தானம் மற்றும் தமன்னா ஆகியோர் கூட்டாக சீட்டு விளையாட்டில் ஈடுபடுகிறார்கள்.
இந்த விளையாட்டில் கைதேர்ந்தவரான தமன்னா இரு ஆண் சிங்கங்களையும் தோற்கடித்து வெற்றியைக் கைப்பற்றிக் கொள்கிறார். அதுமட்டுமில்லை, வெற்றி பெற்ற தமன்னா ஆர்யாவின் பொக்கட்டில் உள்ள தனக்கான வெற்றிப் பணத்தையும் கறந்துவிட்டுதான் விடுகிறார்.
இதனால், இப்பொழுதெல்லாம் யோசித்தே விளையாட ஆரம்பிக்கிறார் ஆர்யா. மணி (பணம்) போய்டுமே !!
கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-