ஆரம்பத்தில் ராகவா லோரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா நடிப்பில் வந்து அனைவரையும் திகிலடைய வைத்து நல்ல பெயர் வாங்கிய படம் முனி. லோரன்ஸ் தானே இயக்கியிருந்தார்.
அதன் பின்னர், லோரன்ஸ், லட்சுமிராய், கோவை சரளா, தேவதர்ஷினி, சரத்குமார் என நட்சத்திரங்கள் போட்டி போட்டு நடித்து, சிரிக்கவும் சொல்லி சிந்திக்கவும் கற்றுக் கொடுத்த படம் காஞ்சனா. அதாவது, முனி 2 !
பின்னர், இந்த அத்தனை படங்களும் கொடுத்த வெற்றியின் நிமித்தம் லோரன்ஸ் உற்சாகமாக அடுத்த படத்தையும் ஆரம்பித்தார். பேய், மர்மம், நகைச்சுவை என்று இவரது படைப்பின் பாணி புதிதாய் இரசிகர்களுக்கு விருந்து சமைத்தது. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும், ஆழமான கதை ஓட்டமும் பல விதத்தில் படத்தைப் பற்றி பேச வைத்தது.
இதன் காரணமாக, லோரன்ஸ் நாயகனாகவும், வெள்ளாவிப் பொண்ணு டாப்ஷி நாயகியாகவும் இன்னும் பல நட்சத்திரங்களோடு முனி 03 என்று படத்தை இயக்க ஆரம்பித்தார். பின்னர் கங்கா என பெயரிட்டுப் பார்த்தார். நாமும் அதே பெயரையே பதித்துக் கொண்டோம். ஆனாலும், அதுதான் இல்லை என்கிற வகையில் இப்பொழுது முனி 3, காஞ்சனா 2ஆக மாறியுள்ளது. காஞ்சனாவின் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியால் இதற்கும் அதே பெயரை இட்டுள்ளதாக லோரன்ஸ் சொல்கிறார்.
இப்படம், கோடை விருந்துக்கு வருகின்ற படங்களில் ஒன்றாக இணையவுள்ளது.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-