மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பெங்களூர் டேஸ் எனும் படம் தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக் ஆகிறது. ஆரம்பத்தில் இந்தப்படத்தில் நடிப்பதற்காக, சமந்தா & சித்தார்த்திடம் பேசப்பட்டது. அப்போது அவர்களும் காதலர்களாக இருந்தபடியினால், ஒத்துக்கொண்டார்கள். ஆனாலும், இப்போது காதல் கசந்து போய் பிரிந்து விட்டதினால் மறுத்து விட்டார்கள்.
ஐயோ, பாவமே என்கிற அளவில் பட யூனிட் தவித்துப் போனார்கள். பின்னர், ஆர்யா, ஸ்ரீதிவ்யா, ராணா, பாபி சிம்ஹா, நித்யாமேனன் போன்ற நடிகர்கள்கள் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், படத்துக்கு போடப்பட்டுள்ள பட்ஜெட் அதிகம் என்பதால், இன்னுமொரு பெரிய பிரபலத்தை இப்படத்திற்கு கொண்டு வந்தால் இன்னும் எதிர்பார்ப்பும் வியாபாரமும் அள்ளும் எனும் நோக்கில், படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடம் பேசப்பட்டு வருகிறது.
அவர் இன்னும் முடிவினை சொல்லவில்லை. காரணம், அஜித் நடிப்பில் உருவாக உள்ள தல 56 படத்தில், ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் நயன்தாரா இடையில் தான் பெயர் பரிசீலனை நடந்து வருகிறது.
இது இப்படி இருக்கும்போது, ஸ்ருதிஹாசன் அஜித் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், நயன்தாராதான் நாயகி என்பது எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ஆர்யாவின் படத்தில் நடிக்க போய் விட்டால், அஜித் பட வாய்ப்பு கை நழுவிப் போய்விடும் என்பதனால், குழப்பத்தில் முடிவு சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார் நயன்தாரா.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-