346 Views
இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளில் விளையாட்டுப் போட்டிகளை தொகுத்து வழங்கும் நட்சத்திரப் பெண்களைப் பற்றிய ஒரு பார்வை.
1. சொனாலி நக்ரானி : பல்வேறு கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் இவர். அழகு ராணிப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்றுள்ள இவர் முதல் ஐ.பி.எல் தொடரை தொகுத்து வழங்கியவர்.
2. அர்சனா விஜயா
முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளினியான இவர் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஐ.பி. எல் போட்டிகளையும் தொகுத்து வழங்கிய பெருமை இவருக்கு உண்டு.

3. கரிஸ்மா கோடக்
இவர் ஒரு பிரித்தானிய இந்திய மொடல் அழகி. நடிகையாகவும் , தொகுப்பாளராகவும் பிரகாசித்து வருபவர். ஐ.பி.எல் 6 ஐ தொகுத்தும் வழங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீர ர்கள் பலரையும் செவ்வி கண்டு பிரபலமானவரும் கூட.
4. சிபானி தண்டேகர்
இந்திய பாடகியான இவர், மொடல் அழகியும் கூட. ஐ.பி.எல் 4 ஆம் தொடரினை தொகுத்து வழங்கிய இவர் , சி.சி.எல் போட்டிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

5. மயாந்தி லாங்கர்
இந்திய தொகுப்பாளினியான இவர் தொலைக்காட்சி விளையாட்டு செய்தியாளராகவும் உள்ளார். கிரிக்கெட் , உதைபந்து என பல தொடர்களை தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் உலக க்கிண்ண போட்டிகளையும் தொகுத்து வழங்கிவருகின்றார். 2011 உல க க் கிண்ண கிரிக்கெட் தொடரையும் தொகுத்து வழங்கியிருந்தார் இவர். இந்திய அணி வீர ர் ஸ்டுவர்ட் பின்னியின் மனைவி இவர் என்பது குறிப்பிட த்தக்கது.