கிரிக்கெட்டின் தாய் விளையாட்டுக்கு கோச்சராக நடிக்கிறாராம் நம்ம சமுத்திரகனி, நீங்க குழம்புறது புரியுது .
இதுக்கும் கோச்சரா? அதை இயக்குனரிடம் கேட்டால் படம் பார்த்து தெரிந்து கொள்ளட்டாம் ....பாதிப்படப்பிடிப்பு முடிந்து விட்ட பெட்டிகடைக்கு இன்று விடுமுறை என்ற புதிய படத்தில்தான் இவர் கில்லி விளையாட்டின் கோச்சராக நடிக்கிறாராம்
வித்தியாசமான கதாபாத்திரங்களை சவாலாக தேடிச்சென்று நடித்து அதில் பெயரும் வாங்கியவர் இந்த தனித்துவ இயக்குனரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான சமுத்திரகனி. அப்போ இந்த படத்திற்கும் சிறந்த நடுநிலைமை வகித்து வெற்றியை தீர்மானிப்பார் என்று நாமும் எதிர்பார்க்கலாம் .
-கந்தப்பன் பிரஷாந்த்-