மீண்டும் சிக்கலில் ஆண்ட்ரியா - சிக்குவாரா ஜெய்....?????நடிகையாக அறிமுகமாகி, பின்னர் இசையமைப்பாளர்களின் தயவால் ஒரு சில பாடல்களைப் பாடி, பாடகிகளாக அவதாரம் எடுப்பது தமிழ் சினிமாவில் இப்போதொன்றும் புதிதான விடையமல்ல. மாறாக பின்னணிப்பாடகியாக வந்து நடிகையான ஒரு சில நடிகைகளும் இல்லாமல் இல்லை, அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் நடிகை ஆண்ட்ரியா.
இவர் சூப்பர்ஹிட் ஆன பாடல்களை பாடியும், படங்களில் நடித்தும் புகழ் பெற்றாரோ... இல்லையோ... கிசுகிசுவில் ஆதாரபூர்வமாக சிக்கி அகப்பட்டுக்கொண்டவர். அதன்மூலம் புகழ் பெற்றவர் என்றால் தப்பில்லை. “வை திஸ் கொலைவெறி" என்று மற்றவர்கள் கேட்குமளவுக்கு "வை திஸ் கொலைவெறி" பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்துடன் அவ்வளவு நெருக்கம் காட்டியவர் இந்த ஆண்ட்ரியா.

இப்படி கிசுகிசு அலையில் அடிபட்டு சிக்கி நொந்துபோய் இப்போது தான் ஒருவாறு இவர் மீண்டு வந்திருக்கிருக்கும் நிலையில், மறுபடியும் ஆண்டியாவை நோக்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது பேரலை ஒன்று, ஆனால் இது அனிருத் ரூபத்தில் அல்ல. "வலியவன்" ஹீரோ ஜெய் என்ற விஸ்வரூபத்தில் என்று தகவல் சொல்கிறார்கள் கோடம்பாக்கவாசிகள்.
இது இப்படியிருக்க, ஆண்ட்ரியாவோ எல்லா நடிகைகளையும் போலவே தன்னுடன் நடிகர் 'ஜெய்' யை இணைத்து பேசப்படுகின்ற கதைகளை மறுக்க ஆரம்பித்திருக்கிறார். எவ்வாறு இப்படியான விஷயங்கள் வெளியே கசிகின்றன என்று செம கடுப்பிலும் இருப்பதாக சொல்கிறார்கள் ஆண்ட்ரியாவுக்கு நெருக்கமான தரப்பினர்.
அத்துடன், இப்படியான ஆதாரமற்ற விசயங்களை யார் பரப்புகிறார்கள் என்ற சிந்தனையில் இருக்கும் ஆண்ட்ரியா, ஒருவேளை ஹீரோ தரப்பிலிருந்தே தமது ரகசியங்கள் வெளியிடப்படுகின்றதோ என்ற கோணத்திலும் ஜோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதனால் ஜெய்யின் பக்கம் வேவுபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட தனது உதவியாளர்களை பணித்துள்ளதாகவும் கோடம்பாக்கம் தமிழ்சினிமா வட்டாரம் கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கின்றது.
திரையில் நடிக்க வருகின்றதோ... இல்லையோ.... நிஜத்தில் நல்லா நடிக்கிறாங்க அம்மணி.
*கணேசமூர்த்தி ராகவன்.