Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
முன்னேஸ்வர ஆலய வளாகத்தில் தோன்றிய சிலை

munneshwaram tembale - முன்னேஸ்வர ஆலய வளாகத்தில் தோன்றிய சிலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,092 Views
முன்னேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள நீர் வற்றிய வாவி ஒன்றிலிருந்து வரலாற்று சிற்பங்களை ஒத்த, உடைந்த சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிலை நேற்று முன்தினம் தினம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கழுத்து பகுதியிலிருந்து முழங்கால் வரையில் ஒரு பகுதியாகவும், முழங்காலிலிருந்து பாதம் வரை பிரிதொரு பகுதியாகவும் உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள குறித்த சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்சிக்குட்படுத்தி வருகின்றனர்.

குறித்த பகுதியில் சேற்று மண் அகற்றும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், சிலை காணப்பட்டதாகவும்,
காவல் துறையினருக்கு அறிவித்ததை தொடர்ந்து காவல் துறையினர் அதனை படுவஸ்நுவர பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி கிளை அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் முன்னேஸ்வரத்தில் மிகவும் பழமையான சிவன் கோயில் ஒன்றும் காணப்படுகின்றது.

அதன்வரலாற்றினையும் கீழே பார்க்கலாம்.

முன்னேஸ்வரம் அல்லது முன்னேஸ்வரம் இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோவில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. 

முன்னேஸ்வரம் கோவில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்று. இக்கோயிலில் மக்கள் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவில் பிரதேசத்தில் மொத்தம் ஐந்து கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒரு பௌத்தக் கோவிலும் உள்ளன. 

முக்கியமானதும், பெரியதுமான சிவன் கோவிலில் வடிவாம்பிகா சமேதராக முன்னைநாதர் (சிவன்) உள்ளார். 

இதனைத் தவிர பிள்ளையார் கோவில், காளி கோவில், மற்றும் ஐயனார் (சிங்களத்தில் ஐயநாயக்கர்) கோவில்களும் உள்ளன. இங்குள்ள காளி கோவிலில் பௌத்தர், கத்தோலிக்கர்களும் வழிபடுகின்றனர்.

மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. 

ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போரத்துக்கேயரின் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

      


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top