நாயகிகளுக்கு வயது ஆகினால், அவர்களுக்குரிய இடங்கள் இல்லாமல் தான் போய்விடும் என்பதற்கு நடிகை சோனியா அகர்வாலும் ஒரு நல்ல உதாரணம்.
திரு இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தில் டாப்ஸி ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் டாப்ஸிக்கு அக்காவாக சோனியா அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வலியவன்' படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை', ‘சமர்', ‘நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவற்றின் பின்னர் இந்தப் புதிய படத்தில் நடிப்பாரென கூறப்படுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-