உலக நாயகன் கமல் நடிப்பில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் உத்தம வில்லன். வழமை போலவே கமல் படங்களுக்கு வருகின்ற அத்தனை பிரச்சினைகளும் சர்ச்சைகளும் இந்தப் படத்துக்கும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்று படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், துபாய் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் படம் வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், உத்தம வில்லன் படத்தை கமல், தனது நெருக்கமான நண்பர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார். இந்த சிறப்பு நண்பர் குழாமில் நம்ம குஷ்பூவும் உள்ளடக்கம். படத்தை உலக நாயகனோடு இணைந்து பார்த்து இரசித்த அக்கா, இன்று மதியமே தனது ட்விட்டர் பக்கத்தை எழுதி நிரப்பி விட்டார்.
அதாவது, படத்திலுள்ள காட்சி அமைப்புக்கள் இதுவரை நாம் பார்த்திராத வகையில், ஆங்கிலப் படங்களின் அளவுக்கு பிரம்மாண்டமாக அமைந்துள்ளன. இது மட்டுமில்லாமல், காட்சிக்கு காட்சி கமல் மற்றும் ஏனைய நடிகர்களும் பிரம்மிக்க வைக்கிறார்கள். நடிப்பு நடனம் என்பனவற்றோடு படஹ்தில் அவரது கண்களும் கதை பேசுகின்றன. ஆக மொத்தத்தில், கமல் சார் படம்தான் இதுவும் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார் என்று அள்ளி வீசி வாழ்த்தியுள்ளார் அம்மணி.
-கோடம்பாக்கக் குருவி-