ஒரு சில படங்களில் ஜொலித்தாலும், சில படங்கள் கைவிட்டு விடுவது சினிமாவை பொறுத்தவரைக்கும் வழமை தான் என்றாலும், ஜீவாவின் சிநிவா வாழ்வில் அதிகமாக அடுத்தடுத்து சறுக்கல்களுக்கு பஞ்சமில்லை. இறுதியில் வந்த யான் திரைப்படமும், கைவிட்டு விட்டது.
இதனால், மிகத் தெளிவாக தனது அடுத்த படத்துக்கான கதையை ஆராய்ந்து கேட்டு ஒத்துக் கொண்டார். படம் கிராமியப் பின்னணியில் நடைபெறும் கதையாக அமைந்துள்ளது. இதில் நயன்தாரா நடித்தால் இன்னும் படத்துக்கான எதிர்பார்ப்பும் விருப்பமும் அதிகரிக்குமென ஜீவாவும், இயக்குனரும் விரும்ப நயனிடம் பேசியுள்ளது படக்குழு. ஆனாலும், நயன்தாராவிடம் திகதிகள் இல்லை.
இருந்தும் படக்குழு அம்மணியை விடவில்லை. அதிகரித்த சம்பளம், குறைந்த திகதிகள் தந்தாள் போதுமானது என்று சலுகைகளை அள்ளி வீசியுள்ளனர். நயனும் உடனே திகதிகளை வழங்கியுள்ளார். சந்தோஷமாக படக்குழு இப்பொழுது கும்பகோணத்தில் முகாமிட்டுள்ளது. அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஜீவா மற்றும் நயனின் திருநாள்.
-கோடம்பாக்கக் குருவி-