மே மாதம் முதலாம் திகதி திரை தொட்ட வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக்கோடு ஜோடி போட்டவர் அழகு தமிழ் பேசும் திறைமைசாலி நடிகை ப்ரியா ஆனந்த். இவரது நேர்த்தியான நடிப்பும் நல்ல குணாதிசயங்களும் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புக்களை அள்ளி வருகின்றன எனலாம்.
இப்பொழுது, டி.ஜே.ஞானவேல் இயக்கம் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகிக்கும் சமவளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கூட்டத்தில் ஒருவன் என பெயரிடப்பட்டுள்ளது.
நாயகனாக தெகிடி ஹீரோ அசோக் செல்வன் நடிக்க, அவரோடு நாசரும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சாதாரண குடும்பத்து நாயகனுக்கு வரும் காதல், பிரச்சினைகள் மற்றும் அவர் எப்படி அதிலிருந்து மீள்கிறார் என்பதையே சொல்லும் படமாக வரவுள்ளது இந்த கூட்டத்தில் ஒருவன்.
ஆக, ப்ரியா ஆனந்த் அசோக் செல்வனோடு ஜோடி சேர்ந்து எப்படி நடித்து நல்ல பெயர் வாங்குகிறார் என்பதை படம் வந்ததும் பார்க்கலாம் மக்கள்ஸ்...
-கோடம்பாக்கக் குருவி-