நகைச்சுவை நடிகர் சந்தானம் காமெடியனாக நடிப்பதை விட, நாயகனாக நடிக்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். சில படங்களில் நாயகனாக இவர் தலை காட்டியிருந்தாலும், இன்னும் அவருக்கு நாயகனாக நல்ல இடம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் சந்தானம் நாயகனாக நடித்துவரும் படம் இனிமே இப்படித்தான்.முருகானந்தம் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் குமார் தயாநிதி இசையைமத்திருக்கிறார். இவர் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் உதவியாளராக பணியாற்றியவர்.வரும் மே 29ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ஏ.ஆர். ரகுமான் சிறப்பு விருந்தினராக வர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இசைப்புயல் இந்தப் பக்கம் வந்து போக வாய்ப்பு உள்ளதா என்பதை பொறுத்திருந்து அறிந்து ஆனந்திப்போம் மக்கள்ஸ்....!!
-கோடம்பாக்கக் குருவி-