தமிழ்த் திரை உலகினர் அனைவரும் இணைந்து கலைநிகழ்ச்சிகள், பேரணிகள், ஊர்வலங்கள் இவையெல்லாம் தாண்டி படப்பிடிப்புக்கள் இல்லாத நேரம், (அல்லது வாய்ப்புக்கள் இல்லாத நேரம்) விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம்.
ஏற்கனவே இவர்களால் ஒன்றாக இணைந்து 'நட்சத்திர கிரிக்கெட்' - Celebrity Cricket League என்று தொடங்கப்பட்டது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இதே போல தமிழ் திரையுலகினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பெட்மிட்டன் போட்டிகளை நடாத்த 'இந்தியன் பட்மின்டன் செலிபிரட்டி லீக்' என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதில் கலந்துகொள்ள பல பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருவதோடு, இப்போதே அவர்களின் பெயர்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதுவரைக்கும் ஆர்யா, பரத், ஜெய், ஜெயம் ரவி, வீ.டி.வீ கணேஷ், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, உதய், ஆதி, மேலும் பலரும், நடிகைகளில் அமலா பால், லக்ஷ்மி ராய், ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் ஆகியோரும் அடங்குவர்.
இதற்கான பயிற்சிகள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப்போட்டிகளின் தொடக்க விழா ஜுலை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் வசூலாகும் நிதியை பட்மின்டன்வீரர்களின் நலன்கருதி செலவிடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
எல்லாம் நல்லா நடந்தா சரி தான்..