20,097 Views
குறித்த இளைஞன் ரயில் முன் பாய்வதற்கு முன்னர் அவரை பிடித்து வைத்திருந்த யுவதி யார் என்பது தொடர்பில் விசாரணை திரும்பியுள்ளது.
அப் பெண் குறித்து உயிரிழந்த இளைஞனின் உறவினர்களோ, அல்லது அவரை விட்டு பிரிந்து சென்ற மனைவியோ அறிந்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
நீளமான காற்சட்டையும், டீ சேர்டும் அணிந்திருந்த பெண்ணொருவர் குறித்த இளைஞன் தற்கொலை செய்வதற்கு முன் அவனைப் பிடித்துகொண்டு நின்றதாகவும் , ரயில் வெயங்கொடை ரயில் நிலையத்துக்கு வந்ததும் அவ்விளைஞன் அதன் முன் பாய்ந்ததாகவும் இதன் போது அப் பெண் அங்கிருந்து ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை குறித்த ரயிலை செலுத்திய சாரதி தெரிவித்துள்ளார். மேலும் இத் தற்கொலை தொடர்பில் இளைஞனை விட்டுப் பிரிந்த அவரது மனைவியும் வாக்குமூலம் அளித்துள்ளார்.