11,269 Views
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு மட்டுமல்ல, வீழ்ச்சிக்கும் நிச்சயமாக காரணம் இருக்கவே செய்யும். சிரிப்பு நடிகராக மக்களால் சிகரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட வடிவேலு.. சில வருடங்களுக்கு முன் யாரும் எதிர்பாராவிதமாக கீழே தள்ளப்பட்டார்.
அவரது வீழ்ச்சிக்கு அரசியல் களத்தில் அவர் போட்ட வேஷம் எடுபடாமல் போனது ஒரு காரணம் என்றாலும், அதைவிட முக்கியமானதொரு காரணம் உண்டு. இது திரையுலகினருக்கு மட்டுமே தெரிந்த நிஜம்.
சிரிப்பு நடிகராக உச்சத்தில் இருந்தபோது, தனக்கு வாழ்வு கொடுத்தவர்கள் தொடங்கி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி கதாநாயக நடிகர்களின் படங்கள் வெற்றியடைவதற்கு தானே காரணம் என்று நினைத்தார். அதை பலரிடமும் சொல்லவும் தொடங்கினார். வடிவேலுவின் தலைக்கனப் பேச்சு சம்மந்தப்பட்ட ஹீரோக்களின் காதுகளுக்குப் போக, ஒவ்வொருவராக வடிவேலுவை ஓரங்கட்ட ஆரம்பிக்க..
இன்னொரு பக்கம் ஒரு நாளைக்கு 15 சம்பளம் கேட்டார் வடிவேலு. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைய… ஒருகட்டத்தில் திரையுலகத்தைவிட்டே வடிவேலு காணாமல்போனார். இந்த சூழ்நிலையில் தான் கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டார்.
ஏறக்குறைய மூன்று வருட வனவாசத்துக்குப் பிறகு இப்போதுதான் மெல்ல தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் வடிவேலுவின் ஆணவப்பேச்சு குறையவில்லை.
எலி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்வி…
காமெடியனான உங்களுடன் பல நடிகைகள் நடிக்கத் தயங்கியபோது சதா நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி என்ற ரீதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு வடிவேலு சொன்ன பதில் என்ன தெரியுமா?
”என்ன இப்படி கேள்வி கேக்குறீங்க? கேள்வியே அசிங்கமா இருக்கு. நான் என்ன அவளை தாலி கட்டி குடும்பம் நடத்தவா கூப்பிடுறேன். நடிக்கத்தானே கூப்பிட்டேன்? இவ இல்லைன்னா… இன்னொருத்தி. அவளும் இல்லைன்னா வேறொருத்தி”
என்று ஒட்டுமொத்த நடிகைகளையே தரக்குறைவாகப் பேசிய வடிவேலு அடுத்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்லும்போது விஜய், சூர்யாவையும் வம்பிற்கு இழுத்தார்.
”புலி படத்துக்கு எலி போட்டியா இருக்குமா?” – இது கேள்வி.
”ஒருத்தன் சிங்கம்னு எடுக்கிறான்… இன்னொருத்தன் புலின்னு எடுக்கிறான். நான் எலின்னு எடுக்கிறேன். நாளைக்கு கரப்பான்பூச்சின்னு கூட எடுப்பேன்” – இதுதான் வடிவேலுவின் பதில்.
அவையடக்கம்… நாவடக்கம்… எதைப்பற்றியும் கவலைப்படாமல் இதே ரீதியில் பேசிக்கொண்டே போனார் வடிவேலு.
=== CASTRO RAHUL ===