6,932 Views
சிரிப்பு நடிகரான வடிவேலு கதாநாயகனாக நடித்த படங்களில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி’ மட்டுமே வெற்றியடைந்தது. அதையடுத்து நடித்த ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படம் படு தோல்வி.
சில வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் கதாநாயகன் வேஷம் கட்டிய ‘தெனாலிராமன்’ படமும் தேறவில்லை. இதோ இப்போது ‘எலி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வளரும் ‘எலி’ படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடித்திருக்கிறார்.
இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படும் ‘எலி’ படத்தில், ஒரு இந்திப் பாடல் இடம்பெறுகிறது. பிரபல ஹிந்தி நடிகரான ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா தாகூர் இணைந்து நடித்து 1969 -ஆம் ஆண்டு வெளியாகி சரித்திரம் படைத்த ‘ஆராதனா’ படத்தில் இடம் பெற்ற ‘மேரே சப்னோ கி ராணி’ என்ற பாடலைத்தான் எலி படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.
ஆராதனா படத்தின் தயாரிப்பாளரிடம் முறையாக உரிமம் பெற்று, ‘மேரே சப்னோ கி ராணி’ பாடலை பயன்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
வடிவேலுவும், சதாவும் இப்பாடலுக்கு நடனமாட, பழம்பெரும் நடன இயக்குநர் தாராவின் நடன இயக்கத்தில் மூணாறில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
ஒரு தமிழ்ப்படத்தில் ஒரு ஹிந்திப்பாடலை முழுமையாய் பயன்படுத்தி இருப்பது தைரியம்தான்…!
=== CASTRO RAHUL ===