புங்குடுதீவில் 18 வயது மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதானவர்களின் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாக கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு எதிராக நேற்று யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக சமுகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, இந்த விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை படுகொலை செய்யப்பட்டவரின் இறுதி கிரியை நேற்றையதினம் நடைபெற்றிருந்தது.
இந்த படுகொலை சம்பவத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.